Princiya Dixci / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் பிணைக்குக் கையொப்பம் இட்ட குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை, இம்மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டார்.
மூதூரில் தனியார் இலத்திரனியல் நிறுவனம் ஒன்றில் 60,000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டிப்பெட்டியொன்றினைப் பெறுவதற்காக நண்பர் ஒருவருக்கு பிணைக்குக் கையொப்பம் இட்டு பெற்றுக்கொடுத்துள்ளார்.
நண்பர் குளிரூட்டிப்பெட்டிக்கு சில காலம் தவணைப்பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையிலே பிணையாளரை மூதூர் பொலிஸார் கைதுசெய்து, மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago