Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணம் நமது நாட்டு பெண்களின் ஆடையும், பாலியல் சம்பந்தமான ஊடகங்களுமே ஆகும் என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பெண்களின் ஆடையே முக்கிய காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் பெண்களின் புகைப்படங்கள், ஆபாச படங்கள் என்பன வாலிபர்களின் உணர்வை தூண்டக்கூடியதாக இருக்கின்றன என்றார்.
மேலும்,சவூதியில் வெறுமனே பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லை, மாறாக பாலியலை தூண்டும் அனைத்து வழிவகைகளையும் அங்கு தடை செய்துள்ளார்கள். அங்கு பகிரங்க சினிமா இல்லை. அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது. மித மிஞ்சிய ஆண் பெண் கலப்பு இல்லை. இவ்வாறு அனைத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதனையும் மீறி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்படுகிறது.ஆனால் நமது நாட்டில் பாலியல் உந்துதலுக்குரிய அனைத்து பாதைகளையும் திறந்து விட்டு துஷ்பிரயோகம் அதிகரித்து விட்டதே என கூறுகின்றோம்.
ஆகவே, பெண்களின் மோசமான ஆடைகளை கட்டுப்படுத்தும் வகையில் முதலில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதே போல் பாலியலை தூண்டும் அனைத்து விடயங்களையும் தடுத்து விட்டு அதன் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago