2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரைத் தாக்கி காயம் ஏற்படுத்திய 27 வயதுடைய  ஒருவரை இம்மாதம் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க பெரேரா,  புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.        

காணிப் பிரச்சினை காரணமாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை  மேற்படி நபர் தாக்கியதாக  அக்போபுர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய,  சந்தேக நபர் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X