2025 மே 22, வியாழக்கிழமை

பெண்ணைத் தாக்கிவிட்டு கொள்ளையிட முயன்றவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

திருகோணமலை, சீனக்குடா பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட முயன்ற நபர் ஒருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா  திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.                           

ஐந்தாம் கட்டை, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                           

குறித்த சந்தேக நபர் சீனக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு அத்துமீறி புகுந்து வீட்டில் உள்ள பெண்ணைத் தாக்கி விட்டு தொலைக்காட்சிப் பெட்டி, நகைகள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட முயன்ற நிலையில் அயல் வீட்டார் சந்தேக நபரை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.    

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .