2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் மரணத்தில் சந்தேகம்: பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைப்பு

Kogilavani   / 2017 மார்ச் 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நல்லடக்கம் செய்யப்படவிருந்த குறித்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிவான், நேற்று உத்தரவிட்டார்.

திருகோணமலை, பள்ளிக்குடியிருப்பு சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுப் பெண், நேற்றுக் காலை உயிரிழந்தார்.

இவர், காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்து, அப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சடலத்தை நல்லடக்கம் செய்ய முற்பட்டதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, சம்பூர் பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், சம்பவ இடத்துக்கு வருகை தந்தததுடன் சடலத்தை பார்வையிட்டதன் பின்பு, அச்சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு சம்பூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார், மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X