Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, நிலாவெளியில் பெண்ணொருவருக்கு அவதூராக பேசிய நபர் ஒருவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பெர்ணாண்டோ இன்று வியாழக்கிழமை (2) உத்தரவிட்டார்.
நிலாவெளி, ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆனந்தபுரியில் உள்ள பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணொருவரை தொலைபேசி மூலமும் நேரிலும் தவறான வார்த்தை பிரயோகங்கள் மூலமாக பேசியதாக குறித்த பெண் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரை புதன்கிழமை (01) கைது செய்து இன்று (02) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago