Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
பொத்துவில் உப வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதுடன், அங்கு தனியான கல்வி வலயம் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
பொத்துவில் உப வலயப் பாடசாலைகளில் 60 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் செவ்வாய்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, பொத்துவில் உப வலயத்தில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சரிடம் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பொத்துவில் உப வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து கல்விப் பணிப்பாளர்களைக் கொண்ட குழுவொன்வை அங்கு அனுப்பியுள்ளேன்' என்றார்.
'மேலும் பொத்துவில், ஆத்திமுனைக் கிராமத்திலுள்ள கவிவாணர் அப்துல் அஸீஸ் வித்தியாலத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விசேட கவனம் எடுக்கப்படும். அக்கரைப்பற்று வலயம் மற்றும் பொத்துவில் உப வலயத்தின்; கல்வி வளர்ச்சி தொடர்பாக அப்பிரதேசங்களுக்கு மிக விரைவில் வருகை தருவேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .