2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதை பொருட்பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்

Thipaan   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமாhர், எஸ்.சசிக்குமார், பொன் ஆனந்தம், பதூர்தீன் சியானா

போதையற்ற நாட்டை உருவாக்க கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கத்துக்;கிணங்க, அன்புவெளிபுரம் சிவில் சமூகத்தினரது ஏற்பாட்டில், நேற்றுச் சனிக்கிழமை (15) விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

போதை பொருட்பாவனை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம், விழிப்புணர்வு ஊர்வலமும் விழிப்புணர்வுக் கூட்டம் என்பன இடம்பெற்றன.

இந்த ஊர்வலமானது, அன்புவெளிபுரம் தி ஃகலைமகள் மகா வித்தியாலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, காந்திநகர் வீதி வழியாக அநுராதபுரச் சந்தியை வந்தடைந்து, கன்னியா வீதி ஊடாக மீண்டும்  தி ஃகலைமகள் மகா வித்தியாலய    அடைந்து   பாடசாலை மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது.

ஊர்வலம் சென்ற வீதிகளில் விழிப்புணர்வு வீதி நடாகங்களும் நடாத்தப்பட்டு மக்களிடையே   போதைப் பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களும் இடம்பெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .