Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா
அரசியல் யாப்பு சீர்திருத்தம்; மீதான பொதுமக்கள் யோசனைகளை முன்வைக்கும் நடவடிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மனித உரிமைகள், காணி தொடர்பாக நீதி வழங்க பிராந்திய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும், சம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கான கடும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும், நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை பேணப்படுமாறு இருக்க வேண்டும், 12 ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும், தொகுதி மற்றும் தொகுதியை 50க்கு 50 வீதம் என்ற அடிப்படையில் தேர்தல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்கள் யோசனைகளை முன்வைத்தனர்.
இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026