2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய அமைப்பாளர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து, கட்சியை மீளவும் கட்டியெழுப்புவது தொடர்பான கூட்டமொன்று கட்சியின் செயலாளர் கபீர் காசிம் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த வெள்ளிகிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர், திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும் முதூர், திருகோணமலை தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றிவருகின்றார் என்பது குறுப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X