2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஒலு முதீன் கியாஸ்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில், புதையல் தோண்டிக் கொண்டிருந்த, குச்சவெளி காஸிம் நகரைச் சேர்ந்தமூன்று பேரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) இரவு கைதுசெய்துள்ளதாக, குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலர் புதையல் தோண்டிக் கொண்டிருப்பதாக, தமக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்தை சுற்றி வளைத்த போதே இவர்களைக் கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .