2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டியோருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில், புதையல் தோண்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் ரி.சரவணராஜா, இன்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) இரவு கைதுசெய்யப்பட்ட இவர்கள், ஜாயா நகர் வடலிக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றைய ஆறு பேர் தப்பியோடியதாகவும் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .