2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாம்புக் கடிக்கு இலக்கான சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அத்தாபெந்திவெவ பகுதியில் பாம்பு கடிக்கு இலக்கான 03 வயது சிறுமியொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில், இன்று (22) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்கான சிறுமி கவினி விஷ்னிகா 03 வயது எனவும் தெரியவருகிறது.

குறித்த சிறுமியின் தாய், கிணற்றடியில் இருந்த போது, தூக்கத்திலிருந்த சிறுமி எழுந்து வெளியில் வந்ததுள்ளார். சிறுமி, 'பாம்பு... பாம்பு...' எனக் கதறியழுததையடுத்து, வீட்டுக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்ததாக தாயார் கூறினார்.

சிறுமி, பாம்பு கடிக்கு உள்ளாகி 15 நிமிடங்களில் மயக்கடைந்து, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .