2026 மார்ச் 23, திங்கட்கிழமை

புறாக்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, தோப்பூர் உதவிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் கிராமத்தில்; கூட்டில் அடைத்துவைக்கப்பட்ட 06 புறாக்கள் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு திருட்டுப் போயுள்ளதாக தோப்பூர் பொலிஸ் நிலையத்தில் அதன் உரிமையாளர் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

9,000 ரூபாய் பெறுமதியான 06 புறாக்களே திருட்டுப் போயுள்ளன.  

தனது வீட்டு வளவில் புறாக்களை வளர்த்து வருகின்ற  மேற்படி நபர், வழமைபோன்று நேற்றையதினம் காலை புறாக்களுக்கு தீனி; போடுவதற்குச் சென்றபோது,  புறாக்கள் குறைந்துள்ளதை அவதானித்துள்ளார். இதன் பின்னர்,  காணாமல் போன புறாக்களை தனது வீட்டு வளவிலும்  அயலிலும் தேடியபோதிலும், புறாக்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், புறாக்கள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸில் மேற்படி நபர்  முறைப்பாடு செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .