Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் ஐந்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய ஒருவரை திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து அந்நாணயத்தாள்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன் வாங்குவதற்காக திருகோணமலை மீன்சந்தைக்கு வந்த இச்சந்தேக நபர், மீன் வியாபாரி ஒருவரிடம் அரைக்கிலோகிராம் மீனை பெற்றுக்கொண்டு 1,000 ரூபாய் நாணயத்தாளை வழங்கினார். இதற்கான மீதிப் பணத்தையும் அவ்வியாபாரியிடமிருந்து சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறே மற்றுமொரு மீன்வியாபாரியிடமும் அரைக்கிலோகிராம் மீனை வாங்கிக்கொண்டு 1,000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி, அவ்வியாபாரியிடமும் மீதிப் பணத்தையும் சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதை அவதானித்த முதலாவது மீன் வியாபாரி சந்தேகமடைந்து மீன் வாங்குவதற்காக தன்னிடம் சந்தேக நபர் வழங்கிய 1,000 ரூபாய் நாணயத்தாளை பார்த்துள்ளார். இந்நிலையில், அந்நாணயத்தாள் போலியெனத் தெரியவந்தது.
இதனை அடுத்து 119 ஊடாக பொலிஸாருக்கு அம்மீன் வியாபாரி தகவல் வழங்கினார். இந்நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026