Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய நபரொருவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.
திருகோணமலை ஆண்டான் குளம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர், மது அருந்திவிட்டு பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கெதிராக மூன்று வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதோடு, பழைய குரோதமே இத்தாக்குதல் சம்பவத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, செவ்வாய்கிழமை (16) காலை கைதுசெய்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026