2025 மே 22, வியாழக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

திருகோணமலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று செவ்வாய்கிழமை (26)உத்தரவிட்டார்.                            

திருகோணமலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 51வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                     

உப்புவெளி பொபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குறித்த சந்தேக நபர்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியை நீண்ட காலமாக காதலித்து வந்ததோடு, இரவு வேளைகளில் சந்தித்தும் வந்துள்ளார்.

இந்த விடயம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையில் வாய்த்தர்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதால், சந்தேகநபர் பொலிஸாரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   

குறித்தசந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் திங்கட்கிழமை (25) கைது செய்து இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.            


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .