Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில்வேளாண்மையை மேயச் சென்ற பசு மாடு ஒன்றை வெட்டிக் காயப்படுத்தியவரை, மார்ச் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று புதன்கிழமை (24)உத்தரவிட்டார்.
மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மேற்கொண்டு வரும் வேளாண்மையைச் செய்கைக்குள் மேயச்சென்ற பசு மாட்டினை வெட்டி காயப்படுத்தியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டு உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை, புதன்கிழமை (24) அதிகாலையில் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026