2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பஞ்சம் தீர்க்கும் துரித மரவள்ளி

Princiya Dixci   / 2022 ஜூலை 12 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, துரித பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ், மரவள்ளி மற்றும் இராசவள்ளிக் கிழங்கு ஆகிய நடும் நிகழ்வு, முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் நேற்று (11) நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சபீரின் வீட்டுத் தோட்டத்தில் இச் செய்கைக்கான மரவள்ளி தடி நடும் நிகழ்வு நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில் இவ்வாறான திட்டம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மட்டம் என ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலரும் இதனை திறம்பட செய்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் சித்திக் மற்றும் கிராம அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X