Suganthini Ratnam / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகளில் நியமனங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் உச்ச வயது எல்லையானது 45ஆகக் காணப்படும்போது, கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இந்த வயது எல்லையை 35ஆக வரையறுப்பது ஏன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கேள்வியெழுப்பினார்.
2016ஆம் ஆண்டின் முதலாவது கிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலையிலுள்ள மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் முன்வைக்கப்பட்ட அவசரப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடமாகாண சபை மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் 45 வயது வரையான பட்டதாரிகளை நியமனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யும்போது, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மாத்திரம், தற்பொழுது அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களைக்; கோரியுள்ள நிலையில், அதற்குரிய வயது எல்லையை 35ஆக வரையறுத்திருப்பது படித்து பட்டம் பெற்றவர்களுக்கு இளைக்கப்படுகின்ற அநீதியாகும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை கூடிய கவனம் செலுத்தி, மிக விரைவாக நடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணத்தில் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்;.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, 'இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையினால் அமைக்கப்பட்டுள்ள உபகுழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
7 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago