Niroshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கந்தளாயில் நான்கு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவருக்கு உடந்தையாக இருந்த ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க செவ்வாய்கிழமை (09)உத்தரவிட்டார்.
பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் நகரில் சில்லறைக் கடைகளுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் டொபி போன்ற பொருட்களை வழங்கி வந்த நிலையில் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள கடை முதலாளி ஒருவரிடம் நான்கு இலட்சம் ரூபாய் பணத்தை மற்றொருவருக்கு வழங்குவதற்கும் தான் அப் பணத் தொகையை பொறுப்பேற்பதாகவும் உடந்தையாகவும் குறித்த நபர் இருந்துள்ளார்.
இந்நிலையில், பணத்தைப் பெற்ற பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
பணத்தை வழங்கிய உரிமையாளர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து உடந்தையாக இருந்தவரை செவ்வாய்க்கிழமை(09) கைது செய்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026