2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பணமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Administrator   / 2016 ஜூன் 07 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப்.முபாரக்                      
 திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த சந்தேகநபரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தம்மிக்க இன்று செவ்வாய்க்கிழமை (7) உத்தரவிட்டார்.

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.    

குறித்த சந்தேகநபர் கந்தளாய் பிரதேசத்தில் ஒருவரிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை வியாபாரத்திற்காக பெற்று பின்பு அதனை வழங்காமல் தலைமரைவாக இருந்த நிலையிலே, பணத்தினை வழங்கியவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை திங்கட்கிழமை (6) கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X