Suganthini Ratnam / 2016 மே 12 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, இறக்கக்கண்டி வாழையூற்றுக் கிராமத்தில் பனை ஓலையிலான கைப்பணி பயிற்சி நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு, (பெடோ) பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஆறு மாதகால பயிற்சியை முன்னெடுத்துள்ளது.
பனை ஓலையைப் பயன்படுத்தி பெட்டி, கடகம் இழைத்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட கைப்பணிகளே முன்னெடுக்கப்படவுள்ளன.
வேலையற்றிருக்கும் யுவதிகள் மற்றும் குடும்பத் தலைவிகள் முப்பது பேர் இப்பயிற்சிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி இறக்கக்கண்டியில் பனை ஓலைப் பயிற்சியைப் பெற்றுவரும் 50 யுவதிகள் கலந்துகொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கிராமியக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பெடோ நிறுவனத்தின் முகாமையாளர் எ.எல்றபாய்தீன் பாபு தெரிவித்தார்.

19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago