2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பன்றி இறைச்சியுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் 87 கிலோகிராம் பன்றி இறைச்சியை சிறிய ரக வாகனமொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை இன்று புதன்கிழமை அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

திரியாய் -கள்ளம்பத்த வீதியினூடாக சென்றுகொண்டிருந்த குறித்த வாகனத்தை இடைமறித்துச் சோதனையிட்டபோது, அதில் பன்றி இறைச்சி இருந்தமை தெரியவந்துள்ளது.

கோமரங்கடவெல, கிவ்லகட பகுதியைச் 45, 41 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X