2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பன்றி வெடியில் சிக்கிய நபர் உயிரிழப்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில், பன்றிக்கு வைக்கும் அக்குப்பட்டாஸ் வெடித்ததில் நேற்று செவ்வாய்க்கிழமை (19)  வெடித்ததில், நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த அருணகுமார (வயது 35) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் அவருடைய நண்பரும் கடந்த சனிக்கிழமை (16), மோட்டார் சைக்கிளிலில் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியின் குறுக்காக வந்த யானையின் தாக்குதலுக்கிழக்காகி, அவருடைய நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

தன்னுடைய நண்பனுடைய இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத இவர், கடந்த மூன்று நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்ததாகவும் அதன் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா அல்லது கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாரா என்பது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .