Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் கிராமத்தில் பனம் பொருள் விற்பனை நிலையமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுவதால், அவற்றிலிருந்து அதிகூடிய உற்பத்திகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கு குறிப்பாக, குடிசைக் கைத்தொழிலாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இந்த நிலையம் சிறந்த வாய்ப்பு அளிக்குமென அப்பகுதியின் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி சிவலிங்கம் சாந்தா தெரிவித்தார்.
ஐ.ஒ.எம். எனப்படும் சர்வதேச புலம்பெயர்தலுக்கான நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago