2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பேருந்து விபத்து : 22க்கும் மேற்பட்டோர் காயம்

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி ஏ-15 வீதியில் பயணித்த பேருந்து ஒன்று கங்கைத்துறை பாலத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இதில் பேருந்தின் சாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .