2025 மே 22, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, புறாமலைப் பகுதி கடலில் நீராடிக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம், மிகிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தைச் சேர்ந்த நான்காம் வருட மாணவரான டபிள்யூ.சீ.சாறுக்க ஜெயசிங்க (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.

புறாமலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் கடலில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை நீராடிக்கொண்டிருந்தனர். இதன்போது, குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், அம்மாணவனை மீட்டு நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .