Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட தோப்பூர் 04ஆம் வட்டாரத்திலுள்ள பலசரக்குக் கடையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தோப்பூர் பொலிஸில் அக்கடை உரிமையாளர் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
கைபேசி மீள்நிரப்பு அட்டைகள், பணம் ஆகியவற்றுடன், கடை உரிமையாளரின் மனைவி அணிந்திருந்த முக்கால் பவுண் தங்கச்சங்கிலியையும் திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
கடைக்கு பின்னால் தனது வீடு இருந்தமையினால் மனைவியின் சங்கிலியை திருடர்கள் அறுத்துச்செல்ல நேரிட்டது.
திருடர்கள் கொண்டுவந்த கத்தியொன்றையும் கடையில் விட்டுச் சென்றுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
இத்திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago