2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பஸ் நிறுத்துமிடங்களில் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தத் திட்டம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்தும் இடங்கள் சிலவற்றில், தொலைபேசி வசதிகளையும் சிறந்த உணவுச்சாலைகளையும் விரைவில் நிறுவவுள்ளதாக, கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சமந்த பி அபேவிக்கிரம தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, வியாழக்கிழமை (18) ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், தனியார் போக்குவரத்து வசதிகளையும், பயணிகளுக்கு சிறந்த வினைத்திறன் மிக்கதொரு போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில், இவ்வருடத்துக்குள் தூரப்பிரதேசங்களிலிருந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக கந்தளாய், வாகரை மற்றும் பதியத்தலாவ போன்ற பிரதேசங்களில் சிறந்த உணவுச் சாலைகளை நிறுவ எண்ணியுள்ளோம்.

அதேபோன்று, பஸ்களைத் திருத்திக் கொள்ளுவதற்கு சிறந்த பழுது பார்த்தல் நிலையங்களை திருத்தும் இடங்களையும் ஏற்படுத்தவுள்ளோம்.

வளிபதனப்படுத்தியுடன் கூடிய பஸ்களின் தரத்தை அதிகரிப்பதோடு, பஸ்களில் மதுபானம் வைத்திருத்தல் ஏற்றிச்செல்லுதல் போன்றவற்றிற்கு எதிராக பொலிஸாரின் உதவியோடு கடும் சட்டங்களை அமுல்படுத்த போவதாகவும் அவர், தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .