Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜூலை 20 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ் ஷாபி, எப்.முபாரக், ஹஸ்பர்
கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (20) அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “சஜித் பிரேமதாஸஜனாதிபதிக்கான வேட்புமனுவை வாபஸ் வாங்க எடுத்த தீர்மானமானது பல தரப்புக்களுடன் பல கட்டமாக நடத்திய பேச்சுவார்தையின் பின்னர் எடுக்கப்பட்ட கடினமான முடிவாகும்.
“நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சீராக்க நாமும் சில தியாகங்களை செய்ய வேண்டும்.இது அரசியல் இலாபம் தேடும் நேரமல்ல. அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து, குறுகிய காலத்துக்குள் தேர்தல் ஒன்றுக்குள் செல்ல, வரலாற்று முக்கியத்துவமிக்க முன்மாதிரியை சஜித் செய்துள்ளார்.
“கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன. நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாராளுமன்றத்துக்குள் இன்னும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மை.
“ஆகவே, 45க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியால் தனியே நின்று அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை.
“பொருளாதார நெருக்கடிகளுக்கு குறுகிய நெடுங்கால தீர்வுகளை காண ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது” என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago