Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
பிரதமருக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதம், நேற்று (04) நடைபெற்ற போது, நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது,
“அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களையும் குழப்பி, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குள் தள்ள, அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த கறுப்பாடுகளே, பிரதமருக்கு எதிராக வாக்களித்துள்ளன.
“அரசாங்கம் வழங்குகின்ற சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு, அரசுக்கு எதிராக செயற்படும் இவர்களை, உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதுக்குரிய காலம் இன்றுடன் மலர்ந்துவிட்டதாகவே, நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago