2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிரதமர் ரணில் கிண்ணியா விஜயம்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை (14) மாலை 2.00 மணிக்கு கிண்ணியா வருகை தரவுள்ளார்.

கிண்ணியா மத்திய கல்லூரியில் 2 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'எம்.ஈ.எச்.மஹ்றுப் அரங்கு' பிரதமரால் திறந்து வைக்கப்படுவதோடு புதிய 3 மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்படும்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மாவட்டப்  நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், க.துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொள்வர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X