Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் முஹமட் நவ்பர் தமது கடமைகளை தவிசாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஈ.ஜீ. ஞானகுணாளன் முன்னிலையில் நேற்று (16) பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகர சபை நகர பிதா எஸ்.எச்.எம். நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தவிசாளர், உதவித் தவிசாளர் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பெற்றுக் கொண்டது.
இதன்போது இரண்டு வருடங்களுக்கு பின்பு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு உதவித் தவிசாளர் பதவியை வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரான முஹமட் நவ்பருக்கு உதவித் தவிசாளர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago