Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்
கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக மீண்டும் எம்.எச்.எம்.கனி நியமிக்கப்பட்டார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமை புரிந்த இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த எம்.எச்.எம்.கனி, 27.07.2021 அன்று திடீரென வெருகல் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில், சுமார் 7 மாதங்களின் பின்னர் மீண்டும் 26.02.2022ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், கிண்ணியா பிரதேச செயலாளராக இன்று (28) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னர் கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த எம்.ஏ.அனஸ், வெருகல் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரும் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
எம்.ஏ.அனஸ், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), கிண்ணியா பிரதேச செயலகத்தில் இரு தடவைகள் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
10 minute ago
29 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
43 minute ago