2025 மே 01, வியாழக்கிழமை

பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு, கிழக்கு  மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, இன்று (09) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியினால்,  வைத்தியசாலையின் குறைபாடுகள், எதிர்காலத்தில் அபிவிருத்திகள் செய்வது தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, ஆளுநர் இந்தத் திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.

அதேவேளை, இவ்வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தைப் பார்வையிட்டதுடன், அதற்குத் தேவையான உபகரணங்கள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

வைத்தியசாலையைச் சுற்றி மதில் அமைத்துத் தருமாறு, வைத்தியசாலை ஊழியர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .