2025 மே 14, புதன்கிழமை

பிரத்தியேக வகுப்புகள்: கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல்

Editorial   / 2017 ஜூன் 06 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

பாடசாலைகளில் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள்; தொடர்பில், பாடசாலை நிர்வாகங்களும் பெற்றோரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற அறிவுறுத்தலை முன்வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படும் என, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களின் கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் இந்த அறிவுறுத்தல்  முன்வைக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள 17 வலயக் கல்விப் பணிப்பாளர்களுடனும் எதிர்வரும் 12ஆம் திகதி சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

கிழக்கு மாகாணப் பணிமனையில் கடமையாற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பணிமனை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல், மாகாணக் கல்வி அமைச்சில் திங்கட்கிழமை (5) நடைபெற்றது.

மேலும், பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்புத்  தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்படும் வகையிலும் அவர்களுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும்  ஆலோசனை அமர்வுகளை எதிர்காலத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .