Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில், பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு இலவசமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைப்பதற்கான நடமாடும் சேவை, பாட்டாளிபுரம் பல்தேவை கட்டடத்தில் இன்று (17) நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையிலும் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
குறித்த நிறுவனத்தால் இதற்கு முன்னரும் கிராமப்புற மக்களின் நலன்கருதி, பல நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நடமாடும் சேவையில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.எம்.ஜறூஸ், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன்.சற்சிவானந்தம், மாவட்டப் பதிவாளர், பொருளாதார அபிவிருத்தி உயோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025