2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் ஆயுதமேந்தும் நிலை ஏற்படலாம்’

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால், கிழக்கில் உள்ளவர்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்படலாம் என, திருகோணமலை, மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகே, கிழக்கு பொதுமக்கள் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்து, நேற்று(28) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

 

இதன்போது அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர தலைமையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில், கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசேகர குறிப்பிடுகையில், புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அது நாட்டை பிரிவினைவாதத்தை நோக்கி நகர்த்திச் சென்றுவிடும்.

அவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பொன்றை நடைமுறைப்படுத்தவோ அல்லது வடக்கையும் கிழக்கையும் இணைக்கவோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்கு தமது அமைப்பின் உறுப்பினர்கள் தயங்க மாட்டார்கள் என,அவர் எச்சரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .