2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

புதிய பாலர் பாடசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

குச்சவெளி பிரதேச சபையின் கீழ் உள்ள கோபாலபுரம் பாலர் பாடசாலை கட்டடம் பழுதடைந்து இடப்பற்றாக்குறையுடன்  காணப்படுவதால் அந்தக் கட்டடத்தை தொடர்ச்சியாக பாவிக்க முடியாது நிலை உள்ளது.

இவ் விடயம் தொடர்பாக, நிலாவெளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜே.நிமலகாசனின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் சபை அமர்வில் புதிய கட்டடம் அமைக்க தவிசாளரால் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர்.ஏ.முபாரக்கினால் கோபாலபுரம் புதிய பாலர் பாடசாலை கட்டடத்துக்கான  அடிக்கல் இன்று (27) நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில், பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எஸ்.எம்.சாஜித், பிரதேச சபையின் உறுப்பினரான ஜே.நிமலகாசன், பிரதேச  சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.கஜேந்திரன், வருமான பரிசோதகர் எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .