Mayu / 2024 ஜூலை 01 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ.எச்
திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று திங்கட்கிழமை (01) திருகோணமலை நகர சபைக்கு அண்மையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம் பெற்றது.
குறித்த கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்.

திருக்கோணேஸ்வர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கு இது தொடர்பான மகஜர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது குறித்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் புனித தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல இடரபாடுகளை சந்திக்க நேரிடுவதாக ஆலய பரிபாலன சபை மூலமாக உரிய தரப்புக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறப்பட்டது.
இது தொடர்பில் 2019.06.10 மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஆலயம் ஊடாக செல்லும் கடைகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயத்தை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ,கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் 11.10.2022 குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சட்டவிரோத செயற்பாடு ஒன்று இடம் பெற்றது எனவே ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது ஏலவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் மாற்று இடத்தை வழங்கி வியாபாரத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026