Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 17 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர், ஏ.எம்.கீத்
மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தவுள்ளனர் என்ற புரளி செய்தி, தமிழ் மக்களையும் புனர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகளையும் பாதித்துள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.
உண்மைக்கு புறம்பான இந்தச் செய்தியை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஊடக இல்லத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “கோட்டா கோ ஹம போராட்ட பூமியை கலைக்க, மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டு பண்ணவே இந்த புரளியை ஏற்படுத்தியுள்ளனர்.
“இறுதி யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கத்துக்கு இனப் படுகொலைக்கான சகலவிதமான ஆயுதங்களையும் கொடுத்தது உதவி புரிந்தது இந்திய அரசாங்கமே. இலங்கையில் ஆயுதக் குழுக்களை உருவாக்கவும் மீண்டும் தமிழர்கள் மீது வன்முறைகளை திணிப்பதற்காகவும் செயற்படும் இந்திய அரசின் சதித் திட்டமாக மாறியுள்ளது.
“யுத்தம் முடிவடைந்து 30 வருடங்களின் பின் சமூகத்துடன் புனர்வாழிக்கப்பட்டு இணைந்து வாழ்கின்ற நேரத்தில், பல துன்பங்களை அனுபவிக்கிறோம். வாழ்வதற்கான பொருளாதார நிலை கூட மோசமடைந்த நிலையில் உள்ளது. இவ்வாறாக இருக்கும் போது, மோதல்களை வன்முறையை தூண்டும் செயற்பாடு வேதனையளிக்கிறது.
“ஜனநாயக ரீதியான அரசாங்கத்தை நாம் எதிர்பார்க்கிறோம். எனினும், புலம்பெயர் தமிழர்கள் இணைந்து விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக இட்டுக் கட்டப்பட்ட செய்தியை இந்தியா எம் மீது அரசியல் இலாபத்துக்காக திணிக்கிறது” என்றார்.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago