2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’புரெவி’ புயலின் தாக்கம் திருகோணமலையில் குறைவு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்டத்தில் புரெவி புயல் நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை உணரப்பட்டிருந்த போதும் புயலின் தாக்கம் பாரியளவில் இருக்கவில்லை. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறப்பட்ட புயலானது, திருகோணமலையை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், புயலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்  பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து  680 குடும்பங்கள் 237 இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்திருந்தனர் என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதனால் பாதிப்புகள் தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், புரெவி புயல் தாக்கத்தால் கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட  இடங்களை இன்று (03) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யகம்பத்,  திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் பாண்டிக்கோரள ஆகியோர் நேரில் சென்று  பார்வையிட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் முகமது கனியின் வேண்டுகோளுக்கிணங்க, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  இடிமன் மற்றும் குறிஞ்சாக்கேணி போன்ற இடங்களில் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களையும் விசாரித்து அறிந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X