அப்துல்சலாம் யாசீம் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் நலன் கருதி, "திருகோணமலை மாவட்ட புற்றுநோய் நலன்புரிச்சங்கம்" எனும் பெயரில் புதிய சங்கமொன்று, இன்று (16) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பொது வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் அனூசியா ராஜ்மோகன், வைத்திய நிபுணர் கனேகபாகு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் தலைவராக பீ.ஜனரஞ்சனும் செயலாளராக பீ.போரமும், பொருளாளராக பீ.சசிகலாவும், உபத லைவராக பீ.சக்திபவனும், உதவிச் செயலாளராக ஏ.பீ.புடில் மற்றும் உறுப்பினர்களாக சிஸ்டர் ரத்னி, மைக்கல்,ஜனாப், ஹுஸைன், எஸ்.ஜயவீர, எம்.பீ.ரோஹினி , டொக்டர் பீ.சுரேஷ் கந்தவேல் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது இந்தச் சங்கத்தின் ஊடாக வறுமையின் வாழும் நோயாளர்களுக்கு உதவுவதுடன், வைத்தியசாலையில் காணப்படுகின்ற புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை தயமுயர்த்தி, இன்னும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதே, தமது சங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவையாகுமென, சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்களை நடத்துவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
59 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
5 hours ago