Freelancer / 2023 மே 02 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பின்தங்கிய 5 தமிழ் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், “மகிழ்வோம் - மகிழ்விப்போம்” எனும் தொனிப்பொருளைக் கொண்ட வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பூநகர் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இந்நிகழ்வை, வெருகல் பிரதேச பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
05 வருட திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வை ஸ்ப்பெயின் நாட்டில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரும் இவ் வேலைத்திட்டத்தின் உறுதுணையாக இருந்த நேதாஜியின் தாயார் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் ஈச்சிலம்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பூநகர் பிரதேச சமூக மட்டத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (N)
54 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago