Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை நகர்பகுதியில் நேற்று (27) பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 15 பெண்கள் அழகு கலை நிலையங்களுக்கும், 07 வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிட்டு வருவதுடன், பல் நோக்கு கூட்டுறவு சங்கங்களையும் சோதனைக்குட்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சுற்றி வளைப்பில் திருகோணமலை நகர்ப்பகுதியில் 15 பெண்கள் அழகு படுத்தும் நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய தரவுகளை பெற்றுள்ளதாகவும் அதில் காலாவதியான முகப்பூச்சிகளை வைத்திருந்தமை, அவற்றைக் காட்சிப்படுத்தியமை, காலாவதி மற்றும் உற்பத்தி திகதி பொறிக்கப்படாத கிறீம் வகைகள் பாவனைக்குட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்காக 07 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை பிரபல கோப்சிட்டி ஒன்றிலிருந்து காலாவதியான பதப்படுத்தப்பட்ட சோளம் டின் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago