அப்துல்சலாம் யாசீம் / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மின்சார நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம், இன்று (13) மாலை மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
“லக்ஷ்மி அக்கா” என தாம் அழைப்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறித்த வீட்டு உரிமையாளர்கள், கடந்த 2 வருடங்களாக வெளிநாட்டில் வசிந்து வந்த நிலையில், மேற்படி பெண்ணே, குறித்த வீட்டைப் பராமரிக்கும் பொறுப்புடன் அங்கு வசித்து வந்துள்ளார்.
இப்பெண் உயிரிழந்து 4 நாட்கள் இருக்கக்கூடுமென சந்தேகம் தெரிவித்த பொலிஸார், இம்மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம் ரூமி, சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பணித்தார்.

12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago