2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் மகளிர் மாநாடு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் சக்தியை வலுப்படுத்தும் நோக்கில், மகளிர் மாநாடு, தேர்தல் தொகுதி ரீதியாக நடைபெற்று வருகிறது.

திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான மகளிர் மாநாடு, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில், பிரதேச சபைத் தவிசாளர் ஆர்.ஏ.எஸ்.டி ரத்னாயக்க தலைமையில், நேற்று (07) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சி நிலமே மற்றும் அவரது மனைவி திருமதி லசிதா புஞ்சி நிலமே  கலந்துகொண்டனர். 

இம் மகளிர் மாநாட்டுக்கு, திருகோணமலை மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பெருந்திரளான பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X