2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதி’

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், எப்.முபாரக்

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (29) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  “அன்று எமது நல்லாட்சி அரசாங்கம் தேங்காய்க்கு நிர்ணய விலை நிர்ணயித்த போது, அதை விமர்சித்தவர்களே இன்று தேங்காயின் அளவுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்துள்ளார்கள்” என்றார்.

“இதனால் நாம் தேங்காய் வாங்கச் செல்லும்போது டேப் உடன்தான் கடைக்குச் செல்ல வேண்டும்.  தேங்காய் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயித்ததை நாம் கிண்டல் செய்யவில்லை. ஆனால், தேங்காயின் அளவை பொறுத்து விலையை நிர்ணயிப்பது முட்டாள்தனம்.

“இப்பொழுது சந்தைகளில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தினதும் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளன. அரசின் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இந்த விலை அதிகரிப்பைக் கட்டுபடுத்த முடியாது.

“எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உடனடியாக அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .