Freelancer / 2023 மே 19 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மாதாந்த பரிசோதனையின் போது புல்மோட்டை உதவி அத்தியட்சகர் (ASP) சந்தன பஸ்நாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்றையதினம் (18) பணி நீக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்திற்கான மாதாந்த ஆய்வு நடத்தப்பட்டபோது காயமடைந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட அலுவலர்கள் தனி வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது நோய்வாய்ப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிற்கும் வரிசையில் குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜண்ட் நின்றுள்ளார்.
மேலும் அந்த வரிசையில் நிற்பதற்கு குறிப்பிட்ட சார்ஜண்ட் அனுமதி பெறவில்லை என்றும் அவரது காலணிகள் மற்றும் பெல்ட் போன்றவையும் தூய்மை செய்யப்படவில்லை என்றும் ஏ.எஸ்.பி சந்தன பஸ்நாயக்க கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சார்ஜண்ட் ஏ.எஸ்.பியை நோக்கி “இது ஒரு தவறா? எங்களுக்குள்ள பிரச்னைகள் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். நான் பயப்படவில்லை." என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து சார்ஜன்ட்டின் நடத்தை குறித்து உதவி கண்காணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பேரில் திருகோணமலை எஸ்.எஸ்.பியினால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். R
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago